தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. இந்த தேர்தல் களம் தற்போது பரபரப்பாக பார்க்கப்படும் நிலையில் ராஜ்ய சபாவில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஆறு எம்பிக்களின் பதவிக்கால முடிவடைகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா தேர்தல் நடத்த திமுக மற்றும் அதிமுக விரும்புகின்றன. இந்நிலையில் 6 சீட்டுக்கு 10 கட்சிகள் இப்போதே அடி போடுகிறதாம். திமுகவிடம் காங்கிரஸ், CPM, சிபிஐ, மதிமுக ஆகியவை சீட் கேட்கின்றன. அதேபோல அதிமுகவின் 2 சீட்டுக்கு பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் இன்றி பாமக மற்றும் தேமுதிகவும் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
