பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்.. உடனே அறிவிக்கப்பட்ட அதிரடித் தேர்தல்… நொடிக்குநொடி பரபரப்பில் அரசியல் களம்….!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 26 முதல் தொடங்கி நவம்பர் 2-ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 3-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற நவம்பர் 5-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   

மத்தியப் பிரதேச மாநிலங்களவை இடத்திற்கான வாக்குப்பதிவு நவம்பர் 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், நவம்பர் 16-ஆம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முழுமையாக நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.