கேரள மாநிலம் கண்ணூரில், பேருந்துக்கு அருகில் பைக் ஓட்டுநர் கவனக்குறைவாக ஓவர்டேக் செய்ய முயன்றபோது நேர்ந்த பயங்கரமான விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேருந்துக்கு இடதுபுறமிருந்து வலதுபுறம் முந்திச் செல்ல முயன்றபோது, பின்னோக்கிப் பார்க்காமல் கண்ணாடியைப் பயன்படுத்தாததும், ஹெல்மெட்டை சரியாகக் கட்டாமல் இருந்ததும் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/motordave2/status/2112961366676177028?s=20
பின்னல் வந்த மற்றொரு கனரக வாகனம் பைக்கை சேர்த்து இழுத்து சென்றது. அதில் சிக்கிய பைக், அதிவேகமாக வந்த பேருந்துக்கும் அந்த வாகனத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டதைக் காட்டும் இந்தத் திகில் காட்சியில், பைக்காளர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளது நெட்டிசன்களைப் பதறவைத்துள்ளது. சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.
