பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் இந்திய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தவர்கள், நம்மிடம் இருந்து தண்ணீரை எதிர்பார்க்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
“இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னர் கூறியதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், கள யதார்த்தத்திற்கு மாறாக எந்தவொரு பழைய ஒப்பந்தமும் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை இந்தியா ஏற்கனவே உலகிற்கு உணர்த்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிடம் உலகிற்குத் தேவையான தடுப்பூசி ஆற்றல் மட்டுமல்லாமல், தன்னை எதிர்க்கும் எதிரிகளை நடுங்க வைக்கும் ஆயுத ஆற்றலும் உள்ளது என்பதை ஒட்டுமொத்த உலகமும் தற்போது நன்கு அறிந்துள்ளது என்று அந்த உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
