Categories: சினிமா

“கோடி ரூபாய் கொடுத்து விளம்பரத்தில் நடிக்க கேட்டார்கள்… ஆனா மறுத்துட்டேன்” – என்ன மனுஷன்யா இவரு?

Spread the love

அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான்  எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார். படம் வெளியாகி அவரை முன்னணி கதாநாயகன் ஆக்கியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்றார்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோவாக அவரின் மார்க்கெட் விழுந்தது. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக நந்தா திரைப்படத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற தொடர்ந்து இப்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

#image_title

ஆனால் ராஜ்கிரண் வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக தொடர்ந்து மறுத்து வருகிறார். அதற்குக் காரணம் தான் வில்லனாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறார். அதே போல அவர் விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

அதற்குக் காரணம் என்ன என்பதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “என்னை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒரு விளம்பரத்தில் நடிக்கக் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் எனக்கு  ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் அந்த காசை அவர்கள் எப்படி எடுப்பார்கள். வேட்டியின் விலையை அதிகப்படுத்திதானே.. அதனால் பாதிக்கப்படப் போவது ஏழை மக்கள்தானே?… அதனால்தான் நான் விளம்பரங்களில் நடிப்பதில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago