அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார். படம் வெளியாகி அவரை முன்னணி கதாநாயகன் ஆக்கியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்றார்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோவாக அவரின் மார்க்கெட் விழுந்தது. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக நந்தா திரைப்படத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற தொடர்ந்து இப்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

#image_title
ஆனால் ராஜ்கிரண் வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக தொடர்ந்து மறுத்து வருகிறார். அதற்குக் காரணம் தான் வில்லனாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறார். அதே போல அவர் விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.
அதற்குக் காரணம் என்ன என்பதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “என்னை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒரு விளம்பரத்தில் நடிக்கக் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் அந்த காசை அவர்கள் எப்படி எடுப்பார்கள். வேட்டியின் விலையை அதிகப்படுத்திதானே.. அதனால் பாதிக்கப்படப் போவது ஏழை மக்கள்தானே?… அதனால்தான் நான் விளம்பரங்களில் நடிப்பதில்லை” எனக் கூறியுள்ளார்.