#image_title
தமிழ் சினிமாவில் இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான் தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதிகமாக மெனக்கெடுபவர். கெட்டப்புகளை மாற்றி உடல் எடையை ஏற்றி இறக்கி வருடக்கணக்கில் அர்ப்பணிப்புடன் நடிப்பவர்.
1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் தமிழ் சினிமாவுக்குப் பல கலைஞர்களை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால்தான் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் விக்ரம் ஆகியோர் தமிழ் சினிமா உலகுக்குக் கிடைத்தனர். சேதுவின் வெற்றியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட விக்ரம் அடுத்தடுத்து தில், தூள், சாமி, அந்நியன் என சூப்பர் ஹிட்ஸ்களாகக் கொடுத்து முன்னணி நடிகரானார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து கெட்டப் போடும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறைய தோல்விப் படங்களைக் கொடுத்து பின்தங்கினார். அதனால் அவருக்குப் பின்னர் வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் மார்க்கெட்டைக் கூட இப்போது அவரால் பிடிக்க முடியவில்லை.
#image_title
இந்நிலையில் விக்ரம் சேது என்ற ஹிட் படத்தைக் கொடுப்பதற்கு முன்னர் சினிமாவில் நடிப்பு மட்டும் இல்லாமல் வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி வந்தார். அதில் ஒன்றுதான் டப்பிங் கலைஞராக பணியாற்றியது. டப்பிங் கலைஞராக அவர் தன்னுடைய சக இளம் நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
அப்போது பிரபுதேவா (காதலன்), அப்பாஸ் (காதல் தேசம் உள்ளிட்ட பல படங்கள்), அஜித் (அமராவதி), வினீத், ஜெயராம் ஆகியோரின் தொடக்கக் கால படங்களுக்கு எல்லாம் டப்பிங் பேசியுள்ளார். இந்த படங்களில் அந்தந்த நடிகர்களே டப்பிங் பேசியது போலவே விக்ரம் கதாபாத்திரங்களோடு ஒன்றிணைந்து பேசியிருப்பார் என்பதுதான் பாராட்டக் கூடியது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…