9 நாட்களில் நடித்து கொடுத்த அந்த படம்… ராமனை விட ராவணன் தான் ஜென்டில்மேன்னு சொல்ல வச்ச ரஜினி..!

By Soundarya on தை 27, 2025

Spread the love

70களின் இறுதியில் ரஜினி பல படங்கள் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் டைரக்டர் பி.சி குகநாதன் மாங்குடி மைனர் என்ற படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். இது ஒரு இந்தி படத்தின் ரீமேக். 1978 இல் விசி குகநாதன் இயக்கிய படம் மாங்குடி மைனர். இந்த படத்தில் விஜயகுமார், ரஜினி, ஜெயப்பிரியா சகுந்தலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.  அந்த படத்தின் போது படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைத்ததும் கதை எழுதி நடிகர்களை தேர்வு செய்கிறார். ஹீரோவாக விஜய்குமாரை தேர்வு செய்து விட்டார்.

   

ஆனால் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் வெயிட்டான கேரக்டராக  இருக்க வேண்டும் என்று நினைத்து ரஜினியிடம் பேசுகிறார் . அந்த சமயத்தில் ரஜினி ரொம்பவே பிஸியாக இருந்தால் இரவு பகலாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் டைரக்டரிடம் எங்கள் இடம் இப்போ கால் சீட்டுக்கான தேதி இல்லை. இரண்டு வருஷம் கழித்து தான் தேதி கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்  ரஜினி. அதற்கு குகநாதன் இல்ல நான் ஏற்கனவே கன்பார்ம் பண்ணி விட்டேன் அதனால் எல்லாரையும் செலக்ட் பண்ணி விட்டேன்.

   

 

படத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் .இதில் வில்லன் கேரக்டர் ரொம்ப அழுத்தமானது. நீங்க நடிச்சா தான் நல்லா இருக்கும் என்று கூறியுள்ளார். அப்பொழுது ரஜினி நான் ஆன்மீக பயணம் போவதற்கு முன்பு 9 நாட்கள் என்னோட கால்சீட் தேதியில் இருந்து ஒரு இடைவெளி  வைத்துள்ளேன். அதில் ஒன்பது நாட்களுக்குள் எனக்கான சீனை எடுக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு நான் 100% ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்று கூறியதும் டைரக்டர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செய்துள்ளார் .

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு ரஜினியுடன் காட்சிகளை எடுத்துள்ளார். அப்பொழுது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை ரஜினி நடித்து கொடுத்தாராம். அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரிய சாதனையாகவே பேசப்பட்டதாம். இது படத்தில் டயலாக்குகள் அனைத்தும் கிளாஸ் ஆக இருந்ததால் ரசிகர்களுக்கு ரஜினி  பேசும் டயலாக்குகள் எல்லாம் பிடித்து போனதாம். ஒரு காட்சியில் ராமனை விட இராவணன் தான் ஜென்டில்மேன் என்று சொல்லுவது போல அப்லாஸ் செய்யும் அளவுக்கு இந்த படம் நன்றாக இருந்ததாம்.