“பச்சை நிறமே, பச்சை நிறமே”.. ஸ்லீவ்லெஸ் சேலையில் ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் விஷால் பட நடிகை..!

By Nanthini on தை 27, 2025

Spread the love

தற்போது தமிழ் சினிமாவின் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்ஸ்மாஷ் மூலம் புகழடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகின்றன. அப்படி சினிமாவில் நுழைந்தவர் தான் மிருணாளினி ரவி.

   

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து தமிழில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிவந்தது

   

 

தெலுங்கில் அதர்வாவுடன் சேர்ந்து வால்மீகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதேசமயம் தமிழிலும் சாம்பியன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமா உலகில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய எமினி திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யாவுடன் சேர்ந்து இவர் நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற டும்டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு இவர் ஆடியோ நடனமும் ஒரு காரணம். விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் தற்போது செம பிஸியாக நடித்து வருகிறார் மிருணாளினி. தற்போது தமிழில் போதிய பட வாய்ப்பு இல்லாததால் பிற மொழி படங்களில் செம்ம ஆக்ட்டிவாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ரோமியோ படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.