குரு சொல்லை தட்டாத சிஷியன்.. கே. பாலசந்தர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. மது அருந்துவதை அன்னைக்கே நிறுத்திய ரஜினி..

By admin on மார்கழி 1, 2023

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் மதுப்பழக்கம் உள்ளவர். புகைப்பிடிப்பவர் என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். அவரது வாழ்வில் நடந்த இந்த சம்பவம் குறித்து அவரே ஒரு நேர்காணலில் சொன்னது இது. கே. பாலசந்தர் படம் ஷூட்டிங். பேக்கப் சொன்னதால், ரூமுக்கு வந்துவிட்டேன். மது அருந்தினேன். திடீரென பாலசந்தரின் உதவி இயக்குநர் அமீர்ஜான் போனில் அழைத்தார். ஒரு ஷாட் மிஸ்சாகி விட்டது. சார், உடனே சார் வரச்சொல்கிறார், வாங்க என்றார். நான் அப்படியே ஆடிப் போய்ட்டேன்.

Balachander

   

ஏன்னா, நான் தண்ணி போட்டிருக்கேன். அங்க போனா தெரிஞ்சுடுமே என்ன பண்றதுன்னு மறுபடி பிரஷ் செய்து, குளித்து, உடம்பெல்லாம் ஸ்ப்ரே அடிச்சிக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். மேக்கப் போட்டுக்கிட்டு நிக்கறேன். பாலசந்தர் சார் பக்கத்துல போகக் கூடாதுன்னு தூரத்தில நிக்கிறேன். ஆனாலும் அவருக்கு தெரிஞ்சு போச்சு. ஸ்மெல் கண்டு பிடிச்சாரு. கொஞ்சம் ரூமுக்கு வான்னு சொன்னாரு. ரூமுக்கு போனேன்.

   

Balachander

 

அப்படியே எனக்கு ஆடிப்போச்சு, அப்படியே உட்கார்ந்தேன். நாகேஷ் தெரியுமா உனக்கு, எப்பேர்ப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுன்னு தெரியுமா, என்று என்னிடம் கேட்டார். தெரியுமுன்னு சொன்னேன். அவனுக்கு முன்னால நீ எல்லாம் ஒரு எறும்புக்கு கூட சமம் கிடையாது. ஓகே அவனே தண்ணீ போட்டு லைப்பை வேஸ்ட் பண்ணீட்டு இருக்கான். இனிமேல் நீ ஷூட்டிங்கில தண்ணீ போட்டேன்னு நான் பார்த்தேன்னு, கேட்டேன்னு எனக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று என்னை திட்டினார். அதில் இருந்து, ஷூட்டிங் நேரத்தில் மது குடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கு பிறகு இதுவரை ஷூட்டிங் நேரத்தில் ஒரு சொட்டு மதுகூட குடித்ததில்லை என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.