அஜித்துக்கு மறைமுகமாக உதவும் சூப்பர் ஸ்டார் ரஜினி.. வேட்டையன் படத்தில் ரிலீசுக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா..?

By admin on சித்திரை 8, 2024

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

   

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் நடைபெற்றது. தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

   

 

இந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வேட்டையன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை கொடுத்ததற்கு ஒரு காரணம் உள்ளதாம். அதாவது அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதனால் வேட்டையன் பட பிசினஸ் பணத்தை வைத்து தான் விடாமுயற்சி படத்தில் அதனை முதலீடு செய்து ஈடு செய்ய நினைக்கிறார்களாம்.

ஏற்கனவே நிதி பற்றாக்குறை காரணமாக வேட்டையன் படத்தை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தை எடுக்க தயாரிப்பு திருவனத்தினர் திட்டமிட்டனர். அந்த வகையில் தற்போது வேட்டையன் படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீஸ் பற்றி அறிவித்த நிலையில், அதன் பிசினஸ் பணத்தை வைத்து விடாமுயற்சி படத்தை முடிக்க முடிவெடுத்துள்ளனர்.