Categories: சினிமா

டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் ரஜினி பட நடிகை… அவரே சொன்ன காரணம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரும் பிரபுவும் சேர்ந்து குரு சிஷ்யன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் சந்திரமுகி திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நிலையில் அந்த படமும் சூப்பர் ஹிட் கொடுத்தது. பாண்டியனும் இந்த திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார். குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கௌதமியும், பிரபுவுக்கு ஜோடியாக சீதாவும் நடித்திருந்தனர்.

மேலும் சோ, ஆச்சி மனோரமா மற்றும் வினு சக்கரவர்த்தி என பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். ஜிங்கிடி ஜிங்கிடி, நாற்காலிக்கு சண்டை, வா வா வஞ்சி மலரே ஆகிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இந்த திரைப்படத்தில் ரஜினியின் அப்பாவாக செந்தாமரை என்பவர் நடித்திருந்தார். அதனைப் போலவே அம்மாவாக பத்மஸ்ரீ என்பவர் நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினியுடன் நடித்த பத்மஸ்ரீ அவர்கள் தற்போது சென்னையில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றாராம். அதுவும் ஆறு வருடமாக டீக்கடை நடத்தி வருகிறாராரம். சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, “என் அப்பா இறப்புக்கு பின் குடும்பத்தை நடத்த கஷ்டமாகிடுச்சி.

எங்கப்பா டாக்குமெண்ட்ரி பிலிம் எடுப்பாரு. அதுக்கப்புறம் தான் குடும்ப சூழ்நிலை காரணமா தான் சினிமாவுல இறங்குனேன். அதுக்கப்புறம் டீ கடை பிஸினஸ்ல இறங்கினேன். டீக்கடையில் பட்டுப்புடவை கட்டிட்டு தான் இருப்பேன். 10 ரூபா டீக்கு பட்டுப்புடவை கட்டுற ஆளு நான்தான். எல்லாரும் எனக்கு குட் மரனிக் சொல்வான். முன்னாள் நடிகை டீக்கடை நடத்துவதால் ஏதோ சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுறேன்னு நீங்க நினைக்காதீங்க, கடவுளின் அருளால் என்னிடம் எல்லா வசதிகளும் உள்ளது. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காம தான் டீக்கடை நடத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“இது நியாயமே இல்லை”… அத்துமீறிய விமான நிறுவன ஊழியர்… தோனிக்கு நேர்ந்த அநீதி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோவின் பின்னணி…!

மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…

3 minutes ago

“விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல் போயாச்சு.. அடுத்து இவரா?”…. EPS-க்கு காத்திருந்த அடுத்த ஷாக்…. மாவட்ட நிர்வாகிகளை கூட்டி எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு…!

அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின்…

4 minutes ago

“தயவுசெய்து உள்ளே விடுங்க…” விம்பிள்டன் மேடையில் அழுத உலக நம்பர் 1 வீராங்கனை… டென்னிஸ் அரங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மனதை உலுக்கும் வைரல் வீடியோ…!

விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…

42 minutes ago

ப்ளீஸ் என்ன விட்ருங்க… “திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி… செருப்பு மாலை அணிய வைத்து” உறவினர்கள் செய்த உச்சகட்ட கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

53 minutes ago