Rajinikanth

வேள்பாரி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? – டைரக்டர் ஷங்கர் போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

By Elango on மாசி 1, 2026

Spread the love

இயக்குனர் ஷங்கர் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை பிரமாண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். பாகுபலி போல இந்த படத்தை கொண்டு வர இயக்குனர் ஷங்கர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பென்மீடியா நிறுவனம் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

வரலாற்று பின்னணியில் உருவாகும் ராஜா காலத்து கதையான வேள்பாரி படத்தில் நடிகர் சியான் விக்ரம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் 2 ஹீரோக்களாக நடிக்க உள்ளனர். வேள்பாரி படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் சிவாஜி ரோபோ 2.0 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

   

மேலும் வேள்பாரி படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் இந்திய அளவில் படத்தின் வியாபாரம் வேற லெவலில் இருக்கும் என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் வேள்பாரி படத்தில் சில காட்சிகளில் ரஜினி கேமியோ ரோலில் வருவாரா அல்லது முக்கியமான ஒரு கேரக்டரில் அவர் நடிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.