90s களில்பிரபலமான நடிகராக வலம் வந்தார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் திகழ்கிறார். இவர் ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன்சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

அதை தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அதிகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரை இவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலத்தீவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன். இமயமலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம். அடுத்த மாதம் 6 தேதி ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல உள்ளாராம் .அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலாவில் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளாராம்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் செல்லாமல் இருந்தார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலைக்கு செல்கிறார். தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

