நடிகர் சசிகுமார் உடன் ஹீரோயினியாக களமிறங்கும் விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்… வெளியான புகைப்படங்கள்..!!

By Nanthini on ஆடி 29, 2023

Spread the love

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ருதி பெரியசாமி. சேலத்தை சேர்ந்த மாடலான இவர் விளையாட்டு வீராங்கனை ஆகவும் மாடலாகவும் இருந்து முன்னேறியவர். இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி வந்தவர். இதனை அவரே பல இடங்களில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

   

மாடலிங் என்ற துறை இருக்கிறது என்று தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சரவணன் இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள நந்தன் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் சுருதி பெரியசாமி நடித்துள்ளார்.

   

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஸ்ருதி பெரியசாமி நந்தன் திரைப்படத்தின் இயக்குனர் இரா சரவணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் சசிகுமார் உள்ளார். இதன் மூலம் நண்பன் திரைப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளது உறுதியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Suruthi P இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suruthiperiyasamy)