கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த புதிய திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகிய விவகாரம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்.சி அதிக சம்பளம் கேட்டது, ஃபர்ஸ்ட் காப்பி முறையில் படம் எடுக்கக் கோரியது போன்ற பல வதந்திகள் பரவின. விபரம் அறிந்தவர்கள், படத்தின் கதைதான் உண்மையான பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சுந்தர்.சி ரஜினிக்குக் கொடுத்தது ஒரு நகைச்சுவை கலந்த பேய்க் கதை என கூறப்படுகிறது.
வணிக ரீதியான தேவைக்காக முதலில் சம்மதித்திருந்த கமல், ரஜினியின் கதை தேர்வில் தலையிடவில்லை. இருப்பினும், சுந்தர்.சி கதை சொல்லும் ஒவ்வொரு முறையும் ரஜினி பல மாற்றங்களைக் கோரியுள்ளார். அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்ட முழுமையான கதையை ரஜினி இறுதியாக நிராகரித்ததால், மிகுந்த மனக்கசப்பு அடைந்த சுந்தர்.சி இந்தப் படத்திலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறார்.
விலகுவது குறித்து சுந்தர்.சி, ரஜினி மற்றும் கமல் இருவரிடமும் சொல்லவில்லை என்றும், அவரது அறிக்கை வெளியான பிறகே இருவரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கமலுக்கு ரஜினி ஆறுதல் கூறி, “சுந்தர்.சி போனால் போகட்டும், நீங்கள் கவலைப்பட வேண்டாம், வேறு ஒரு இயக்குநரை வைத்துப் படத்தை தொடங்குவோம்” என்று தைரியம் அளித்தாராம். இதனால், ரஜினிக்காகப் புதிய இயக்குநரைத் தேடும் பணி விரைவில் தொடங்கும் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…
ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…