தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். தலைவர் 170 படத்தில் பகத் பாஸில், ராணா, அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

தினமும் பட குழுவினர் புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் தலைவர் 170 படத்தின் ரஜினி லுக் போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவர் 170 படத்தின் பூஜையும் எளிமையாக நடந்து முடிந்தது. தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் டாப் இசையமைப்பாளரான அனிருத்தின் தந்தை என IND vs NZ மேட்ச் பார்க்க ஸ்டேடியத்திற்கு வந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
