அவர் வந்தாலே பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகருக்காக காத்திருந்த ரஜினிகாந்த்.. பிரபலம் சொன்ன தகவல்..!!

By admin on ஆனி 21, 2024

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு அருணாச்சலம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கினார். அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக சௌந்தர்யா நடித்தார். மேலும் ரம்பா, மனோரம்மா, பிரபல நடிகர் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

As Superstar Rajinikanth's Arunachalam completes 26 years, Khushbu drops an  interesting fact about the film

   

இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்தார். U.K செந்தில்குமார் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துள்ளார். இவர் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். முதன் முதலாக 1993-ஆம் ஆண்டு மனோபாலாவின் கருப்பு வெள்ளை திரைப்படத்தில் வேலை பார்த்தார். சுந்தர்.சி இயக்கத்தில் உருவான அருணாச்சலம் படத்திலும் U.K செந்தில்குமார் கேமராமேனாக வேலை பார்த்தார். அவர் தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

   

Review Film அருணாச்சலம் - Iman Sugirman

 

அருணாச்சலம் படத்தின் அனுபவம், அதில் நடித்த பிரபல நடிகர்கள் பற்றி சித்ரா லட்சுமணன் ஒரு இன்டர்வியூவில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செந்தில்குமார் எனக்கு ஜெய்சங்கர் சாரை மறக்கவே முடியாது. ரொம்ப எனர்ஜிடிக்கான நபர். என்னதான் சுந்தர்.சி, ரஜினி சார் எல்லாரும் ஜாலியா இருந்தாலும் ஜெய்சங்கர் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த உடனே ரொம்ப கலகலப்பா இருக்கும்.

GoldenFrames: Jaishankar, the 'James Bond' of Tamil Cinema- The Etimes  Photogallery Page 9

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது ஜெய்சங்கர் ரொம்ப பாசிட்டிவ் எனர்ஜியோட உள்ள வருவாரு. ஆனா 11 மணிக்கு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாரு. ரஜினி சார் அவர் எப்ப வந்தாலும் அதுக்கப்புறம் ஷூட்டிங் நடத்திக்கலாம். நீங்க 7 மணிக்கு வாங்க 10 மணிக்கு வாங்க அப்படின்னு சொல்லாதீங்க. அவர் எப்ப வராரோ அப்போ ஷூட்டிங் எடுத்துக்கலாம் அப்படின்னு ரஜினி சார் சொல்லுவாரு. ஆனா கரெக்டா 11 மணிக்கு ஜெய்சங்கர் சார் வந்துருவாரு. அவர் வந்தாலே ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப கலகலன்னு இருக்கும் என செந்தில் குமார் கூறியுள்ளார்.