அபூர்வ ராகங்கள் படத்தின் விருது விழாவில் புறக்கணிக்கப்பட்ட ரஜினிகாந்த்.. இவ்வளவு பின்னணி சதிகள் நடந்ததா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

   

1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

இந்நிலையில் அவர் நடித்த அபூர்வ ராகங்கள் படம் முதலே சில புறக்கணிப்புகளை ரஜினிகாந்த் எதிர்கொண்டாராம். அந்த படம் எம் ஜி ஆரின் இதயக்கனி திரைப்படத்தோடு வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி ஹிட்டானது. அந்த படத்தின் வெற்றிவிழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் படக்கலைஞர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜெயசுதா, மேஜர் சுந்தர் ராஜன், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா என அனைவருக்கும் விருது கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ரஜினியை மேடை ஏறி விருது பெறாமல் சிலர் தடுத்தார்களாம். அந்த படத்தில் ரஜினி நடித்தது மிகச்சிறிய வேடம் என்பதால் இது போன்ற புறக்கணிப்புகளை அவர் எதிர்கொண்டாராம்.

ஆனாலும் அடுத்தடுத்து படங்களில் வித்தியாசமாக நடித்து முன்னணி நடிகரானார். அதன் பின்னர் அவர் படங்களின் வெற்றிவிழாக்களில் அவரே மையமான நபரானார் என்பதும் அனைவரும் அறிந்ததே.