Categories: சினிமா

மொதல்ல இந்த படம் பத்தி நல்ல ரிப்போர்ட் வராது… ஆனா பயப்படாதீங்க- சரியாக கணித்து பிரபுவிடம் சொன்ன ரஜினி!

Spread the love

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் விறுவிறுவென தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்தார். முரட்டுக்காளை திரைப்படம் அடைந்த வெற்றியின் காரணமாக வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக உருவானார்.

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பாட்ஷா படம்தான் ஒரு மைல்கல்லாக இன்று வரை இருந்து வருகிறது. இந்த படத்தின் வெற்றிதான் ரஜினியை தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக்கியது. அந்த படத்தின் வெற்றியால்தான் அவருக்கு அரசியல் சூழலிலும் முக்கியத்துவம் உண்டானது.

படையப்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் 2 ஆண்டுகள் இடைவெளியில் நடித்த பாபா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் 3 ஆண்டுகள் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் சந்திரமுகி. அந்த படம் மணிச்சித்திரதாழ் எனும் மலையாளப் படத்தின் ரீமேக்.

இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிகர் பிரபு தயாரித்திருந்தார். படம் முடிந்து ரிலீஸுக்கு முன்னர் படத்தைப் பார்த்த ரஜினி பிரபுவை அழைத்து “இந்த படம் முதல் ஒருவாரத்துக்கு நல்ல ரிப்போர்ட் வராது. ஆனால் அது பத்தி கவலப் படாதீங்க. அதுக்கப்புறம் படம் பிக்கப் ஆகிடும்” என சொன்னாராம். அவர் சொன்னது போல முதல் வாரத்தில் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்துள்ளன.

ஆனால் அதன் பின்னர் படம் பிக்கப் ஆகி 800 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

4 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

8 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

9 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

22 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

24 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

25 minutes ago