தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு… பாஜகவில் இருந்து விலகி… தவெகவில் இணைந்த பிரபல ரஜினி பட நடிகை…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

சென்னை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை தலைவர் கமாண்டோ பாஸ்கரன், தஞ்சை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, புதுச்சேரி ஓய்வு பெற்ற ஐஜி சந்திரன், நடிகை ரஞ்சனா நாச்சியார், திமுகவில் இருந்த காமராஜர் பேத்தி மயூரி, நடிகர் வேலராமமூர்த்தி மகன் ராஜ்மோகன் என ஐம்பதுக்கும் அதிகமானோர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசு அரசியல் செய்வதால் அந்த கட்சியிலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.  அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் நேற்று ஐக்கியமானார். இவர்களில் ஒருவராக பிரபல நடிகையும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளார். துப்பறிவாளன், இரும்புத்திரை, ரஜினியின் அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரஞ்சனா நாச்சியார் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு விஜய் டிவி புகழை வைத்து படம் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

   

 அவர் 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', ரஜினியின் 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரஞ்சனா நாச்சியார் தான். துப்பறிவாளன் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு விஜய் டிவி புகழை வைத்து படம் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

   

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி ஆகிய திரைப்படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் பாலாவின் அண்ணன் மகளான ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். மாநிலச் செயலாளராக இருந்த நிலையில் பாஜகவில் தனக்கு மரியாதை கிடைக்க வில்லை என்று கூறிய அந்த கட்சியில் இருந்து விலகிய பிறகு தற்போது விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இது வெறும் இணைப்பு அல்ல பெண்களின் குரல், அரசியல் முழக்கம் தொடங்கும் என்று அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த இணைப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.