இந்த படம் சரியா வருமா..? சத்தமாக கேட்ட ரஜினியை SP முத்துராமன் எப்படி சமாதானப்படுத்தினார் தெரியுமா ?

By vinoth on மாசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தன்னுடைய ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த் அதிகமாக இணைந்து வெற்றி படங்கள் கொடுத்தது இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில்தான். அவர்கள் இயக்கத்தில் வந்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் பாணியில் அமைந்தன. அதில் உச்சம் தொட்டது முரட்டுக் காளை திரைப்படம். இருவரும் இணைந்து 25 படங்கள் பணிபுரிந்துள்ளனர்.

   

இவர்கள் கூட்டணியில் உருவான ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் எங்கேயே கேட்ட குரல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவர்களின் கமர்ஷியல் பாணியில் இருந்து விலகி எதார்த்தமான பாணியில் உருவாக்கப்பட்டது. இதில் ஆறிலிருந்து அறுபது வயது வரை திரைப்படம் உருவாக்கத்தின் போது ரஜினிக்கு அந்த படத்தில் முழுவதும் நம்பிக்கையில்லையாம்.

   

ஷூட்டிங்கின் போது தினமும் இயக்குனர் எஸ் பி முத்துராமனிடம் “இந்த படம் சரியாக உருவாவது போல எனக்கு தோன்றவில்லை” என சொல்லியுள்ளார். இயக்குனர் எஸ் பி முத்துராமனும் கதாசிரியர் பஞ்சு அருணாசலமும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லையாம்.

 

அதன் பிறகு அவரிடம் “ஒன்று செய்வோம். எந்த தலையீடும் இல்லாமல் எங்களை 5000 அடி எடுக்க விடுங்கள். அதன் பிறகு உங்களுக்கு போட்டுக் காட்டுகிறோம். அதன் பிறகு முடிவெடுக்கலாம்” எனக் கூறியுள்ளார். அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவிக்கவே அதன்படி படத்தை எடுத்து போட்டு காட்டியுள்ளனர். அதை பார்த்த பின்னர் ரஜினிக்கு முழு திருப்தி வந்துவிட்டதாம்.

அப்படி உருவான ஆறிலிருந்து அறுபது வயது வரை திரைப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது எஸ் பி முத்துராமனுக்கும் கிடைத்துள்ளது.