ஸ்டைலிஷ் தமிழச்சி… ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் சீரியல் நடிகை ரக்ஷிதா… அல்ட்ரா மாடர்ன் போட்டோஷூட் கிளிக்ஸ்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

   

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து மிகப்பிரபலமானார் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர்.

ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் , ரக்ஷிதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பல பேட்டிகளிலும், பல சந்தர்ப்பங்களிலும் தற்பொழுதும் கூட கூறி வருகிறார். ஆனால் தினேஷிடமிருந்து எப்படியாவது விவாகரத்து பெற வேண்டும் என்பதில் ரக்ஷிதா குறிக்கோளுடன் இருக்கிறார். தினேஷ் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய ரக்ஷிதா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய இப்புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.