சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேட்டையின் பட சூட்டிங் முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங் கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் இல்லாத காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் முழுவதுமாக குணமடைந்து வந்த பின்னர் தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க முடியும். லோகேஷ் கூலி படத்தின் ஷூட்டிங் வேகமாக முடித்துவிட்டு கைதி 2 திரைப்பட சூட்டிங் லோகேஷ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் கைதி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்க லோகேஷ் திட்டமிட்டார். ஆனால் கூலி படத்தின் சூட்டிங் தாமதம் ஆனால் கைதி 2 படத்தின் ஷூட்டிங் தாமதமாகும் என தெரிகிறது. இது மட்டுமில்லாமல் வேறு ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது. அது என்னவென்றால் கடந்த 1982 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பில் கூலி என்ற தலைப்பில் ஒரு படம் ஹிந்தியில் ரிலீஸ் ஆனது. அந்தப் பட சூட்டின் நடைபெற்ற போது அமிதாப்பச்சனுக்கு விபத்து ஏற்பட்டது. அவரது வயிற்றில் கண்ணாடி குத்தியதாக கூறப்படுகிறது.

பல மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். அவர் மீண்டு வந்தது பெரிய விஷயம் என சொல்கின்றனர். அதேபோல இப்போது ரஜினிகாந்த்கும் சூட்டிங் நேரத்தில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு சம்பவங்களையும் ரசிகர்கள் ஒன்றாக இணைத்து கூலி என்ற பெயர் ராசி தான் அதற்கு காரணம் என பேசி வருகின்றனர். முன்னதாக சரத்குமார் நடிப்பில் கூலி டைட்டிலில் ஒரு படம் ரிலீஸ் ஆனது. எனவே லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்கு வேறு பெயரை வைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
