அது என்னோட பர்சனல் மேட்டர்.. அத பத்தி தப்பா பேசாதீங்க.. அமைச்சரின் பேச்சுக்கு காட்டமாக பதிலளித்த சமந்தா..!!

By admin on ஐப்பசி 3, 2024

Spread the love

முன்னணி நடிகையான சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் சமந்தா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதாவுடன் கடந்த சில நாட்களுக்கு முப்பு தான் நிச்சயம் நடைபெற்றது. இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சர் கொண்ட சுரேகா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு KTR தான் காரணம் என பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

   

 

தெலுங்கானா அமைச்சரின் பேச்சுக்கு சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நாகர்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் அவருக்கு கோபமாக பதிலடி கொடுத்தனர் இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் கோபமாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் என் விவாகரத்து பர்சனல் மேட்டர். யாரும் அதைப் பற்றி ஊடகங்கள் அடிப்படையில் பேச வேண்டாம்.

நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்பதற்காக அதைப்பற்றி தவறாக பேசாதீர்கள். எங்கள் விவாகரத்து மியூச்சுவல் கன்சென்ட் அடிப்படையில் தான். அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. என் பெயரை உங்கள் அரசியல் பிரச்சினையில் இழுக்காதீங்க. நான் இதுவரை அரசியல் சார்பில்லாமல் தான் இருக்கிறேன். அதே போல தான் இருக்க விரும்புகிறேன் என கோபமாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

 

தெலுங்கானா அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாகர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். அமைச்சர் சுரேகாவின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களை வாழ்க்கையின் எதிரிகளை விமர்சனம் செய்ய பயன்படுத்த வேண்டாம். தயவு செய்து மற்றவர்கள் தனிப்பட்ட உரிமையை மதித்து செயல்படுங்கள்.

பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எங்கள் குடும்பத்தின் பெண்ணுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும் குற்றச்சாட்டுகள் வைப்பதும் பொருத்தம் அற்றதாக உள்ளது. மேலும் உங்கள் கருத்தை உடனே திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டார். இதேபோன்று நடிகர் ஜூனியர் என்டிஆர் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.