உதவிக்காக வந்த பணிப் பெண்ணை அவமானப்படுத்தினாரா ரஜினிகாந்த்.? உண்மையில் நடந்தது என்ன.?

By Ranjith Kumar on மார்ச் 4, 2024

Spread the love

தற்போது முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி ப்ரீ-வெட்டிங்க்கு ரஜினிகாந்த் உம் அவர் மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவியை வருகை தந்துள்ளார்கள். ரஜினிகாந்த் அங்கு வந்துள்ள பொதுமக்கள் ஒருவரிடம் நடந்த விதம் தற்போது பெரும் சர்ச்சையாக கிளம்பியுள்ளது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் ப்ரீ- வெட்டிங் தற்போது வைரலாகி வருகிறது.

இவர்கள் ஜனவரி 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள மிகப்பெரிய கோவிலான “கோல் தர்ணா” வைத்து பாரம்பரியம் முறைப்படி நிச்சயதார்த்தம் நடத்திவிட்டார்கள். அதன் பின் நீண்ட கால இடைவெளிக்குப்பின் உலகில் புகழ்பெற்ற அனைவரையும் அழைத்து ராஜஸ்தானில் உள்ள ஜமு நகரில் அம்பானிக்கு சொந்தமான இடத்தில் வைத்து மூன்று நாட்கள் இவரது நிச்சயதார்த்தம் கோலாலமாக கொண்டாடப்படுகிறது. தற்போது இவர்களின் நிச்சயதார்த்தம் மட்டுமே மூன்று நாட்களும் அதற்கு வரும் உலக பிரபலங்களையும் பார்த்து வாய் அடைத்து நிற்கின்றோம்.

   

இவர்கள் கல்யாணம் ஜூலை மாதம் நடைபெற உள்ளதாம், அப்பொழுது இதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது நடக்கும் நிகழ்ச்சியில் உலக பணக்காரர்கள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள், மிகப்பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் என்று பலரும் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள். அம்பானி அவர்கள் இந்த நிச்சயதார்த்தத்தை இவ்வளவு பிரமாண்டமாக நடத்தி உள்ளார்கள். தற்போது இதற்காக 100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளது. இதில் பல பிரபலங்களுடன் இணைந்து கொண்டவர் தான் ரஜினிகாந்த்தும் அவரது குடும்பமும்.

   

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்குள்ளே செல்லும் பொழுது பத்திரிக்கை துறையின் ரஜினிகாந்த் அவர்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்ட பொழுது, ரஜினிகாந்த் அவர் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா மூவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து நின்றார்கள். தற்போது அதை கவனிக்காமல் ரஜினிகாந்த் அவர்களுக்கு உதவியாக கூட வந்த பணிப்பெண் அவர்கள் உள்ளே நுழைந்தபோது, ரஜினிகாந்த் அவர்கள் வெளியே போக சொல்லி இன்ஸ்டால் செய்வதாக வீடியோவில் பதிவாகி இருந்தது. இதை கண்ட நெட்டிசன்கள் ரஜினி அவர்கள் செய்வது தவறு என்று சர்ச்சையை கிளப்பி விமர்சனம் செய்து வந்தார்கள்.

 

ஆனால் உண்மையில் அங்கு நடந்தது என்னவென்றால் ரஜினி அவர்கள் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்ன பொழுது அந்தப் பெண்மணி தவறாக உள்ளே வந்ததை கவனித்த ரஜினி சற்று தள்ளிப் போங்கள் என்று பணிவாக சொன்னாரே தவிர, வேற எதுவும் தவறாக கூறவில்லை இதை மிகப்பெரிய விஷயமாக சர்ச்சை கிளப்பி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar