கேப்டனையும், என்னையும் சேர்த்து வைத்தது அவர்தான்…! அன்னைக்கு நான் எடுத்த முடிவு….? ரகசியத்தை சொன்ன டி.ராஜேந்தர்….!!

By Devi Ramu on ஆவணி 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பன்முக திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டி.ராஜேந்தர். இவர் இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியராக, இயக்குனராக, நடிகராக தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் ஒரு பேட்டியில் டி.ராஜேந்தர் கூறியதாவது, மறைந்த கேப்டன் விஜயகாந்த் என்னுடைய நெருங்கிய நண்பர்.

அவர் நடித்த படங்களுக்கு நான் இசை அமைத்திருக்கிறேன். அரசியலால் ஒரு சில காரணங்களால் எங்களுடைய நட்பு பிரிந்தது. ஆனால் எங்கள் நட்பை மீண்டும் ஒட்ட வைத்தது எனது மகன் சிலம்பரசன் தான்.

   

கேப்டனும், எங்க அப்பாவும் இப்படி இருக்க கூடாது என கூறி எங்களை இணைக்கும் பாலமாக இருந்தது என் மகன் சிலம்பரசன் தான். அன்று என் மகன் சொன்ன காரணத்திற்காக அப்போது ஒரு முடிவெடுத்தேன். எந்த அரசியல் காரணத்திற்காவும் திரையுலகில் இருக்கும் யாரையும் இழக்க விரும்பவில்லை என டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.