2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில்கேப்டன் விஜயகாந்த் பற்றி விஜய் கூறியிருந்தார்.
இதனை ஆதரிக்கும் விதமாக நேற்று வரை விஜய்யை எங்க வீட்டு பிள்ளை, எங்கள் தம்பி என்று சொல்லி வந்த பிரேமலதா, இன்று விமர்சிக்க தொடங்கியுள்ளார். வாக்கை பிரிக்க விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினாரா? என கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரேமலதா, எங்களுக்கென்று தனி இயக்கம் இருக்கிறது. எங்கள் கட்சியில் வாரிசு இருக்கிறார்கள், கேப்டன் பெயரை வேறு யாரும் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
