ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் அருகே உள்ள பயனா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஒரே நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும் உறவினரும் அழைத்துச் சென்றனர். அப்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸில் செவிலியர்கள் யாரும் பயணிக்கவில்லை என தெரிகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர் மட்டுமே இருந்துள்ளார் .
இந்நிலையில் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸில் இருந்த சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்துள்ளது. இதனால் சுவாசிக்க முடியாமல் பச்சிளம் குழந்தை மயங்கி விழுந்த நிலையில் அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் குழந்தையை கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் தலைமுறைக்கான நிலையில் ஆம்புலன்ஸ் சிலிண்டரில் ஆக்சிஜன் இல்லாததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
