நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் மாணவிகள் பள்ளி சீருடையில் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி சீருடைகள் வட்டமாக அமர்ந்து கொண்டு பிளாஸ்டிக் தமிழர்களில் மது ஊற்றி அதில் தண்ணீர் கலந்து பரிமாறிக் கொள்வதும் சியர்ஸ் சொல்லி குடிப்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
இந்த காட்சிகளை மாணவிகளில் ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இந்த செயலில் ஈடுபட்டதும் அந்த மாணவிகள் அதே பள்ளியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் தெரிய வந்தது.
மேலும் மது அருந்தியவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் என தெரிய வந்துள்ளது. விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதால் பள்ளி வளாகத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் தற்காலிகமாக விடுதி செயல்பட்டு வந்ததாகவும் அதே நேரத்தில் மற்ற மாணவிகள் உணவு எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவிகளை அழைத்து கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒழுக்க கேடாக செயலில் ஈடுபட்டதாக ஆறு மனைவிகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
