தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்து நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் முதல்வர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் மத்தியிலும் மழை தொடர்பான பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
