ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது ODI ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 264/9 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மாட் ஷாட்(74), கூப்பர் கன்னோலி (61) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 47-2வது ஓவரில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
