தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதற்கான விவரங்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் நாளை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாளும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
