“மேலும் ஒரு வாரம்” பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அதிரடி..!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இதனையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றை மேற்கொள்ளலாம் என்று ஏற்கனவே  அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

இந்த விவரங்களை 10 ஆம் தேதிக்குள் திருத்தம் செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .  நவ.19-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது நவ.27 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் அச்சிடப்படும் என்பதால், பணிகளை கவனமாக மேற்கொள்ள HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.