இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பல ஆண்டுகளாகவே கேள்விக்குறிய விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்திய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. காதல், பயணம் மற்றும் பொது பரப்புகள் என எங்கு இருந்தாலும் பெண்கள் மீது நிகழும் அநீதிகள் நாள்தோறும் சமூக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் ரயில் பயணத்தின் போது நடுத்தர வயது நபர் ஒருவர் குடும்பத்துடன் பயணம் செய்த சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எதுவும் நடக்காதது போல அங்கிருந்து எழுந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை கண்ட இளைஞர் ஒருவர் உடனடியாக வீடியோ எடுத்து அந்த ஆசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் சம்பவத்திற்கு உரிய விசாரணை செய்ய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொது போக்குவரத்து சூழலிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க கூடிய அவசியத்தை நினைவு படுத்துகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…