“நீங்க ரியல் ஹீரோ சார்” மயிரிழையில் உயிர் காப்பற்றப்பட்ட பெண் பயணி… ரயில்வே ஊழியரின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு

Spread the love
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண் பயணியை, ரயில்வே ஊழியர் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட அதிர்ச்சி வீடியோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 20, 2025 அன்று, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்லவிருந்த மின்சார ரயிலில் பெண் பயணி ஒருவர் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழப் போனார்.

அருகில் பணியில் இருந்த பயணச் சீட்டுப் பரிசோதகர் (TTE) நிதிஷ்குமார், ஒரு நொடி கூட தாமதிக்காமல் பாய்ந்து சென்று அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார். அவரது இந்த மின்னல் வேகச் செயலால் ஒரு பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. நிதிஷ்குமாரின் இந்த அசாத்தியமான கடமை உணர்வையும், பயணிகளின் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பையும் ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சமீபகாலமாக ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் போன்ற ஆபத்தான செயல்களால் விபத்துகள் அதிகரித்து வருவதால், பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

5 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

5 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago