“திங்கள்கிழமை பதிலுரை… சனிக்கிழமை சர்ப்ரைஸ் ரெய்டு”… திமுகவின் ஸ்கெட்சை உடைத்த CM விஜய்?…. பரபரப்பில் தமிழக அரசியல்…!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, திமுக மூத்த தலைவர் கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

திங்கள்கிழமை முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசும்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கிளப்பி அவருக்கு கடும் அரசியல் நெருக்கடி கொடுக்க திமுக வியூகம் வகுத்திருந்த நிலையில், அதற்குத் தக்க பதிலடி (கவுண்டர்) கொடுக்கும் விதமாகவே இந்த ரெய்டு நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிட்டு முடக்கிவிடப்பட்டதாக தலைமைச் செயலகக் கோட்டை வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன.