இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான ராகுல் திராவிட், இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ரசிகர்களுடன் கனிவாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விமானத்தில் பயணம் செய்த மூன்று ரசிகர்கள், எதிர்பாராதவிதமாக ராகுல் திராவிட்டைக் கண்டறிந்து அவரிடம் ஆட்டோகிராப் பெற்றுள்ளனர்.
https://www.instagram.com/reel/DeUj9vusYaZ/?utm_source=ig_web_copy_link&psln=NTc4MTIwNjQ2YQ==
விமானம் தரையிறங்கிய பின் விமான நிலையப் பேருந்திலும் அவரை மீண்டும் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகியுள்ளது. ராகுல் திராவிட்டின் பிரபலமான விளம்பர வரிகளைக் குறிப்பிட்டு, “நிஜத்தில் அவர் மிகவும் கனிவானவர்” என நெட்டிசன்கள் பலரும் திராவிட்டின் எளிமையான குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.
