நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக திரை உலகில் வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் 1999 ஆம் ஆண்டு ஸ்பீடு டான்சர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் முனி என்ற திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.
இவர் திரைப்பயணத்தையும் தாண்டி மனிதநேயம் மிக்க மனிதனாக பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஒரு தந்தை தனது மகளின் கல்விச் செலவுக்காக மறைந்த மனைவியின் தாலியை அடகு வைத்த செய்தி லாரன்ஸ் காதிற்கு வந்தது. இந்த தந்தையின் பாசம் லாரன்ஸ் இன் கவனத்தை ஈர்த்து உள்ளது. அதனால் தாலியை மீட்டு நேரில் சென்று அந்த தந்தையிடம் வழங்கினார்.
இந்நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பற்றி பேசி லாரன்ஸ், நானும் இது போல போராட்டங்களை தாண்டித்தான் வந்துள்ளேன் . அதனால் அந்த தந்தையின் தவிப்பு எனக்கு புரிந்தது. தாலியை மீட்டுக் கொடுக்க நினைத்தேன் , இது ஒன்றும் வெறும் தங்கம் அல்ல அவர் மனைவியின் நினைவு மற்றும் விலை மதிப்பில்லா பொக்கிஷம் என்று தெரிவித்தார். லாரன்ஸ் மிகவும் மனிதநேயமிக்க மனிதன் , இந்த செயல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.
