நான் அரசியலுக்கு வரலாமா..? எனக்கு அந்த தகுதி இருக்கா..? நீங்க சொல்லுங்க… டுவிஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அரசியல் பயணம் குறித்த மிக முக்கிய முடிவை இன்று வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜயுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்குத் தனது தாயார் முழு சம்மதமும், ஆசியும் வழங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தாயாரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டாலும், மக்களின் முடிவே தனக்கு இறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வருகை குறித்துப் பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ள லாரன்ஸ், “மக்களாகிய நீங்கள் நான் அரசியலுக்கு வரலாமா? மக்கள் சேவை செய்ய எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் மீது தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக, “நீங்கள் வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூறினால், நான் கண்டிப்பாக அரசியலில் ஈடுபடமாட்டேன்” என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.