“என் பொண்டாட்டிய சாவடிச்சிட்டேன்..” திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய சாந்தி.. நள்ளிரவில் தூங்கியபோது தலையில் சுத்தியலை போட்டு கொன்றுவிட்டு… நடந்தது என்ன..? பகீர் சம்பவம்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சாந்தி என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ராஜேந்திரனும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ராஜேந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்தும், குடும்பப் பிரச்சினை காரணமாக அவர்களைப் பிரிந்து சாந்தியுடன் வசித்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக ராஜேந்திரன் வேலைக்குச் செல்லாததால், சாந்தி தெருத் தெருவாகப் புடவை வியாபாரம் செய்து குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.

வியாபார முதலீட்டிற்காகச் சாந்தி பலரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து சண்டையிட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததோடு, சாந்தியின் நடத்தையிலும் ராஜேந்திரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டு தினமும் சண்டை நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, சாந்தி ராஜேந்திரனைத் திட்டிவிட்டு அறையில் தூங்கச் சென்றுள்ளார்.

   

இதனால் கடும் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அதிகாலை 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தியைச் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். சாந்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, ராஜேந்திரன் நேராக அண்ணா நகர் காவல் நிலையத்திற்குச் சென்று “நான் என் பொண்டாட்டிய சாவடிச்சிட்டேன்” எனக் கூறி சரணடைந்தார். போலீசார் சாந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, முதியவர் ராஜேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.