“ராதிகா வீட்டு வேலைக்காரி மகன் கொலை வழக்கு”…. போலீசில் கொலையாளி சொன்ன திடுக்கிடும் ரகசியம்…. வெளியான பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

நடிகை ராதிகாவின் வீட்டுப் பணிப்பெண்ணின் மகன் பிரசாந்த் என்பவர் சமீபத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இக்கொலையில் தொடர்புடைய தேவராசு என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரசாந்த் கொலை செய்யப்பட்டதற்கான திடுக்கிடும் பின்னணி மற்றும் காரணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

போலீஸாரிடம் கொலையாளி தேவராசு அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனது நண்பனான பிரசாந்த், என் மனைவியுடன் தவறான தொடர்பு வைத்துக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தான். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே அவனைக் கொலை செய்யத் திட்டமிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பிரசாந்தை மது அருந்தலாம் என அழைத்துச் சென்ற தேவராசு, தனது மற்றொரு நண்பரான தினேஷ் என்பவருடன் சேர்ந்து பீர் பாட்டிலால் பிரசாந்தைக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.