இந்தத் துயரமான சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறைக்கு வராத மூன்று சக மாணவர்களைப் பற்றி ஆசிரியர் கேட்டபோது, அப் பெண் மாணவி உண்மை நிலவரத்தைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று மாணவர்களும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்த அந்த அப்பாவிச் சிறுமியைத் தாக்கியுள்ளனர். மேலும், அவளது ஹிஜாபைக் கழற்றி எறிந்து, கொடூரமாகத் தாக்கியதை அவர்கள் வீடீயோவும் எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்த மாணவி பெற்றோர் இல்லாத ஒரு ஆதரவற்ற சிறுமி ஆவார். இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். எந்த தவறும் செய்யாமல், ஆசிரியரின் கேள்விக்கு உண்மையைக் கூறியதற்காக இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு அச்சிறுமி ஆளாகியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
https://twitter.com/Rissslh/status/1992269095031521578/video/1
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பள்ளி நிர்வாகம், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டத்தையும் விதிமுறைகளையும் மீறி சக மாணவி மீது வன்முறையை ஏவிய அந்த மூன்று மாணவர்களையும் பள்ளியை விட்டு உடனடியாக நீக்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
