கபாலி நடிகைக்கு நேர்ந்த கொடுமை…! அந்த இடத்தில் பேட் வைக்க சொன்னார்கள்…! ரகசியத்தை உடைத்த ராதிகா ஆப்தே…!!

By Devi Ramu on மார்கழி 23, 2025

Spread the love

தமிழில் ரஜினிகாந்தின் ‘கபாலி’ உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் எப்போதும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வல்லவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தென்னிந்திய திரையுலகில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். தான் ஒரு சில படங்களில் நடிக்கும்போது, மார்பு மற்றும் பின் பகுதிகளில் கூடுதல் ‘பேட்’ (Pad) வைத்துக்கொள்ளுமாறு படக்குழுவினர் வற்புறுத்தியதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளைத் திறமைக்காகப் பார்க்காமல், உடல் தோற்றத்திற்காக இழிவுபடுத்துவதை எண்ணி ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராதிகா ஆப்தே குறிப்பிட்ட அந்தச் சம்பவம் எந்த மொழியில் நடந்தது என்று அவர் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இது தெலுங்குத் திரையுலகமாகத் தான் இருக்கும் என்று பல ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.