வழக்கமாக ரஜினி கமல் நடித்த படங்கள் விஜய் அஜீத் நடித்த படங்கள் தான் ஒரே நாளில் ரீலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும். இந்த முறை தமிழ் சினிமாவில் வித்யாசமான போட்டி உருவாகி உள்ளது. நடிகர் சரத்குமார் நடித்த ஆழி என்ற படத்தை 888 புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குனர் மாதவ் ராமதாஸ் இயக்கத்தில் உருவான ஆழி படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. அதே நாளில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் தாய்க்கிழவி படமும் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா இந்த இருவரில் யாருக்கு பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
