விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவருக்கு தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக கலக்கினார். சின்னத்திரை சீரியல் மூலமாக பிரபலமான இவருக்கு வெள்ளி திரையிலும் நடிக்க மிகவும் ஆசை.

பட வாய்ப்புகளை பெற விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் தேடி வந்தன. மெய் நிகரே என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்தார்.பிறகு இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் ஃபயர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார். சமீபத்தில் அவர் நடித்த ஃபயர் திரைப்படம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரைக்கும் சீரியலில் ஹோம்லியாக பார்த்து வந்த ரச்சிதாவா இது என்று ரசிகர்கள் வியந்து போகும் அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவருடைய காட்சிகள் இருந்தது. இந்நிலையில் வாழ்த்துக்கள் மக்களே என்னுடைய அடுத்த படம் ஆரம்பமாகிவிட்டது என தற்போது நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அள்ளி உள்ளது. சினிமாவில் தொடர்ந்து பல வாய்ப்புகள் மற்றும் வெற்றிகள் உங்களுக்கு குவியட்டும் என ரச்சிதாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
