ஹோம்லியா இருந்த அஞ்சலியா இப்படி?.. கிளாமர் உடையில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on பங்குனி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார் அஞ்சலி.

   

அதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.     பின்னர் அங்காடித்தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட பல தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

   

 

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் புது நடிகைகளின் வரவால் தமிழில் மார்க்கெட் குறைய தெலுங்குக்கு சென்றார் அஞ்சலி ,அங்கும் தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்த அஞ்சலி தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

திடீரென்று அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் சில காலம் நடிக்காமல் போனார். பின்னர் சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார்.

அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வரும் இவர் கிளாமரில் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றார். தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.