நான் சொன்ன கதையைக் கேட்டு ரஜினி பயந்துட்டார்.. இதுவரை அப்படி ஒரு கதையில் அவர் நடித்ததில்லை – பெருமிதமாகப் பேசிய இயக்குனர்!

By vinoth on மார்ச் 31, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் பாலச்சந்தரால் அறிமுகமான போது வில்லன் நடிகராகவே பல படங்களில் நடிக்கவைக்கப்பட்டார். அவரை கதாநாயகன் ஆக்கியது கலைஞானம் அவர்கள்தான். பைரவி படத்தில் அவர ஹீரோவாக்கினார். அதன் பின்னர் முள்ளும் மலரும் வந்து அவரை திறமையான நடிகராக அடையாளம் காட்டியது.

   

அதன் பின்னர் முரட்டுக் காளை திரைப்படம் வெளியாகி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்தார. அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது எஸ் பி முத்துராமனும், ராஜசேகரும்தான். இவர்கள் இருவரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த ரஜினி ஹிட் படங்களாகக் கொடுத்தார்.

   

இந்த கமர்ஷியல் வெற்றிகளால் ரஜினி அதே பாதையில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் ரஜினி நடிக்கவே இல்லை. 90 களில் ரஜினியின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. அப்போது சில ஹிட்ஸ்களைக் கொடுத்து வளர்ந்து வரும் இயக்குனராக இருந்து ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏவிஎம் நிறுவனத்துக்காக ‘ஜில்லா கலெக்டர்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

 

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஆர் வி உதயகுமார் “என்னுடைய சின்னக் கவுண்டர் படமும் ரஜினி சாரின் மன்னன் படமும் ஒன்றாக ரிலீஸாகி இரண்டுமே வெற்றி பெற்றன. அப்போது ரஜினி சார் என் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். நான் ‘ஜில்லா கலெக்டர்’ என்ற கதையை சொன்னேன். அதைக் கேட்டு அவர் பிரம்மித்துவிட்டார். அந்த படத்துக்காக நான் சொன்ன அவரின் அறிமுகக் காட்சியைக் கேட்டு என்னைக் கட்டிபிடித்துக் கொண்டார். இன்னமும் அவரை வைத்து எந்த இயக்குனரும் அப்படி ஒரு படத்தை இயக்கவில்லை. ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக அதை எடுக்க முடியவில்லை. அதற்குப் பின்னர்தான் எஜமான் படத்தை எடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.