கேப்டன் விஜகாந்துக்கு ஆக்சன் படங்களிலில் மும்முரமாக நடித்து வந்த நேரம். வைதேகி காத்திருந்தாள் என்ற மெஹா ஹிட் படத்திற்குப் பிறகு அதுபோன்ற மாறுபட்ட கதைக்களங்களை நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமையவில்லை. ஆனால் இந்தக் குறையைப் போக்கவே அவருக்கென்று வந்த படம் தான் சின்னக் கவுண்டர். கடந்த சில வருடங்களுக்கு முன் எப்படி பேய் படங்கள் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வந்ததோ அதேபோல் கிராமத்து பண்ணையார், பஞ்சாயத்து படங்களும் தொடர்ச்சியாக வந்தன. ரஜினி, கமலையும் இந்த பண்ணையார், நாட்டாமை கதாபாத்திரங்கள் விடவில்லை.
அப்படி உருவானதுதான் எஜமான், தேவர் மகன் போன்ற படங்கள். அதேபோல் புரட்சிக் கலைஞருக்கும் லைப்ஃடைம் செட்டில்மெண்ட் ஆக தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்த படம் தான் சின்னக்கவுண்டர். ஆர்.வி. உதயக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜயகாந்துடன், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை இயக்குநரே எழுத இளையராஜாவின் இசையில் பாடல்களும் கிராமத்து மண் வாசனை வீசியது.
இந்நிலையில் இப்படம் பற்றி ஆர்.வி. உதயக்குமார் கூறுகையில், முத்து மணி பாடல் உருவான விதம் குறித்து பேசியுள்ளார். அதாவது, சின்னக்கவுண்டர் படத்துக்கு பாடல் பண்ணும்போது நான் கொஞ்சம் லேட்டா போயிட்டேன். இளையராஜா என் மேல கோவத்துல இருந்தாரு. நான் தூங்கிட்டேன்னு சொன்னேன். எனக்கு கிராமத்து பாடல் வேணும்னு சொன்னேன். அவரு கோபத்துல 5 நிமிஷத்துல டியூன் போட்டு கொடுத்தாரு. நான் 15 நிமிஷத்துல முத்து மணி பாட்டை எழுதினேன் என்று கூறியுள்ளார்.