நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கர இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்தவரும் எஸ்கே 23 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்புதான் சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 படத்தின் பூஜை போடப்பட்டது.

#image_title
இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இதுதான். மேலும் சுதா கொங்கரா போன்ற வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குனரோடு சிவகார்த்திகேயன் கைகோர்த்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

#image_title
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் வெற்றி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுள்ளது. வசூலை பொருத்தவரை மட்டுமின்றி விமர்சனம் ரீதியாகவும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் கடுமையாக இந்த படத்திற்கு உழைத்துள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான் தற்போது கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.

#image_title
இந்த படத்தின் வெற்றியும் இவருடைய வளர்ச்சியும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து சில வருடங்களுக்கு முன்பாக பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது திரிஷாவிடம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “வளர்ச்சி அற்புதமான ஒன்று வளர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு சிவகார்த்திகேயன் தான்” என்று கூறியுள்ளார்.
